Saturday, 20 September 2014

எல்லாம் முருகனே

எல்லாம் முருகனே

 

எல்லாம் முருகனே

 

 திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் விநாயகர், நடராஜர் சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் போன்ற எல்லா மூர்த்தங்களும் சுப்பிரமணியர் வடிவங்களாகவே தோற்றமளிக்கின்றன.

பொதுவாக சோமாஸ்கந்தர் அமைப்பானது சிவன் மற்றும் பார்வதியின் நடுவில் முருகபெருமான் வீற்றிருப்பதாகவே இருக்கும். ஆனால் இந்த ஆலகத்தில் முருகப்பெருமான் தன் தேவியர்களான வள்ளி - தெய்வானையுடன் வீற்றிருக்கும் அமைப்பே சோமாஸ்கந்தமூர்த்தியாக உள்ளது.

அதேபோல் நடராஜர் சன்னதியில் முருகப்பெருமான் இடது கையில் வில்லும், வலது கையில் வேலும் ஏந்தியபடி காட்சி தருகிறார். இவ்வாறு அனைத்து மூர்த்தங்களுமே முருகப்பெருமான் வடிவங்களாகவே காட்சியளிக்கின்றன.இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும்.